Tuesday, January 24, 2012

இராமகிருஷ்ணபரமஹம்சர்:



  • உலகில் யாரைத் துன்புறுத்தினாலும் அது கடவுளையே துன்புறுத்தியதாக அமையும். அதேபோல் யாருக்கு நன்மை செய்தாலும் அது கடவுளுக்கு செய்தது போல் அமையும்.

  • மற்றவர்கள் உன்னிடம் அச்சமும் மரியாதையும் கொள்ளும்படி நட, ஆனால் நீ யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதே. பிறரால் உனக்கு தீங்கு ஏதும் வராதபடி காத்துக்கொள்

  • நம் அறிவு வளர்ச்சிக்கு ஏற்பவே நாம் மற்றவரையும் கடவுளையும் மதிக்கிறோம். அறிவு வளர்ச்சிக்கு ஏற்பவே நம் வணக்கமும் உள்ளது.  

  • நாம் நினைத்தை செய்துமுடிக்க திட சித்தம் அவசியம் வேண்டும். இல்லையெனில் அன்றாட வாழ்விலும் வெற்றி பெற முடியாது.

  • நல்லவனாக மாற வேண்டும் என்ற எண்ணம் முழுமையாக மனதில் தோன்றி விட்டால் நல்லெண்ணங்கள் தானாகவே தோன்ற ஆரம்பிக்கும்.

  • முன்னேறிப் போகப் போக வாழ்க்கையில் நல்லது நடக்கும். இறைவனிடம் நாம் கேட்டது கிடைத்தவுடன் நிருவிடக் கூடாது. மேலும் மேலும் இறை எண்ணத்தோடு தொடர்ந்து இருக்க வேண்டும். நல்லது தானே தேடி வரும்.

  • நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படியே நம் பழக்க வழக்கங்கள் அமையும். அதிலிருந்து நாம் எளிதில் தப்ப முடியாது.

  • நம்முடைய நிலைக்கேற்ப நம்முடைய நினைப்புகளும் ஏற்படுகிறது.

  • இறைவன் நம்மோடு ஒருவராகவே இருக்க விரும்புகிறார். ஆனால் நாம் தான் அவரிடம் அன்பு கொள்ளாமலும் அலட்சியப் படுத்துவதாலும் அவரை இழக்கிறோம்.

  • அரைகுறை அறிவு பெற்றவர்கள் துன்பத்தில் சிக்கிக்கொள்வார்கள். 

  • கடவுள் ஓருபோதும் தீமைகளால் தீண்டப்படாதவர். அவர் தூய்மையானவர். நீ செய்யும் தவறுக்கு அவரை காரனமாக்காதே. உன் தீய செயலுக்கு நீயே பொறுப்பு.

  • இறைவன் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டுமென்றால் நாம் எப்போதும் அவர் விருப்பப்படி இருக்க வேண்டும்.

  • அடக்கம் அமரருள் உய்க்கும். கடவுள் நம் மீது அன்பாய் இருக்கிறார் என்பதற்காக கர்வப்படக்கூடது. கர்வப்படுபவர்கள் துன்பத்திற்கு ஆளாவார்கள்.

  • இறைவன் மீது பூரண நம்பிக்கை வை. அவர் உனக்கு வழி காட்டுவார்.

  • நம் சிற்றறிவைக்கொண்டு அனைத்தையும் அறிந்துகொண்டதாக எண்ணுவது மடமையே ஆகும்.

  • பேராசை பெருநட்டம். உளைத்துப் பெற்றாலன்றி எதுவும் நமக்கு சொந்தமாகாது.         

  • No comments:

    Post a Comment