Tuesday, January 24, 2012

விவேகானந்தர்:


  • குறுகிய அனுபவம் உள்ளவர்கள் தாங்கள் பார்த்தது தான் உண்மை என்று கருதுகிறர்கள்.
  • இயற்கையான சுபாவத்தை நடைமுறை வாழ்க்கையால் மாற்றுவது என்பது சிரமமாகும்.
  • இந்த உலகமும் நாயின் சுருண்ட வாலைப் போன்றது தான். அதை நிமிர்த்துவதாகக் கூறி சிலர் முயன்று தோற்றுப்போகின்றனர். இதற்க்காத் தூக்கம் கேட்டு நீங்கள் அவதிப்பட வேண்டாம். நீங்கள் இல்லாமலே அது இயங்கிக்கொண்டு தான் இருக்கும்.
  • போலி வாழ்கை வாழ்பவர்கள் பலர் எப்படியோ பெரும் புகழும் பெற்று விடுகிறார்கள். ஆனால் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
  • யாருக்கும் உண்மை தெரியாது என்று தவறு செய்பவர்கள், ஒருநாள் அது பொய் என்று தெரியவந்து அகப்படுவார்கள் என்பதை யாரும் உணரவில்லை.
  • விருந்தினர்களை முதலில் உபசரித்து மகிழ வேண்டும்.
  • ஆளுக்கேற்ற விளக்கம் அளிப்பதே அறிவுடைமையின் அழகு.     

இராமகிருஷ்ணபரமஹம்சர்:



  • உலகில் யாரைத் துன்புறுத்தினாலும் அது கடவுளையே துன்புறுத்தியதாக அமையும். அதேபோல் யாருக்கு நன்மை செய்தாலும் அது கடவுளுக்கு செய்தது போல் அமையும்.

  • மற்றவர்கள் உன்னிடம் அச்சமும் மரியாதையும் கொள்ளும்படி நட, ஆனால் நீ யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதே. பிறரால் உனக்கு தீங்கு ஏதும் வராதபடி காத்துக்கொள்

  • நம் அறிவு வளர்ச்சிக்கு ஏற்பவே நாம் மற்றவரையும் கடவுளையும் மதிக்கிறோம். அறிவு வளர்ச்சிக்கு ஏற்பவே நம் வணக்கமும் உள்ளது.  

  • நாம் நினைத்தை செய்துமுடிக்க திட சித்தம் அவசியம் வேண்டும். இல்லையெனில் அன்றாட வாழ்விலும் வெற்றி பெற முடியாது.

  • நல்லவனாக மாற வேண்டும் என்ற எண்ணம் முழுமையாக மனதில் தோன்றி விட்டால் நல்லெண்ணங்கள் தானாகவே தோன்ற ஆரம்பிக்கும்.

  • முன்னேறிப் போகப் போக வாழ்க்கையில் நல்லது நடக்கும். இறைவனிடம் நாம் கேட்டது கிடைத்தவுடன் நிருவிடக் கூடாது. மேலும் மேலும் இறை எண்ணத்தோடு தொடர்ந்து இருக்க வேண்டும். நல்லது தானே தேடி வரும்.

  • நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படியே நம் பழக்க வழக்கங்கள் அமையும். அதிலிருந்து நாம் எளிதில் தப்ப முடியாது.

  • நம்முடைய நிலைக்கேற்ப நம்முடைய நினைப்புகளும் ஏற்படுகிறது.

  • இறைவன் நம்மோடு ஒருவராகவே இருக்க விரும்புகிறார். ஆனால் நாம் தான் அவரிடம் அன்பு கொள்ளாமலும் அலட்சியப் படுத்துவதாலும் அவரை இழக்கிறோம்.

  • அரைகுறை அறிவு பெற்றவர்கள் துன்பத்தில் சிக்கிக்கொள்வார்கள். 

  • கடவுள் ஓருபோதும் தீமைகளால் தீண்டப்படாதவர். அவர் தூய்மையானவர். நீ செய்யும் தவறுக்கு அவரை காரனமாக்காதே. உன் தீய செயலுக்கு நீயே பொறுப்பு.

  • இறைவன் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டுமென்றால் நாம் எப்போதும் அவர் விருப்பப்படி இருக்க வேண்டும்.

  • அடக்கம் அமரருள் உய்க்கும். கடவுள் நம் மீது அன்பாய் இருக்கிறார் என்பதற்காக கர்வப்படக்கூடது. கர்வப்படுபவர்கள் துன்பத்திற்கு ஆளாவார்கள்.

  • இறைவன் மீது பூரண நம்பிக்கை வை. அவர் உனக்கு வழி காட்டுவார்.

  • நம் சிற்றறிவைக்கொண்டு அனைத்தையும் அறிந்துகொண்டதாக எண்ணுவது மடமையே ஆகும்.

  • பேராசை பெருநட்டம். உளைத்துப் பெற்றாலன்றி எதுவும் நமக்கு சொந்தமாகாது.         

  • Sunday, January 15, 2012

    குருநானக்:


    • இறைவன் எல்லாம் அறிந்தவர். அழிப்பவரும் அவரே அழித்ததை மீண்டும் உயிர் பெறச்  செய்பவரும் அவரே.
    • நாம் இறந்த பின் நம்முடைய செல்வம் நம்முடன் வராது. நாம் செய்த தான தர்மங்களே நம்மைப் பின்தொடரும்.

    நபிகள் நாயகம்


    • மனம் திருந்தியவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் செய்வார்.
    • மற்றவர்கள் மனம் வருந்தும்படி நடக்கக்கூடாது.
    • தனக்கு உதவியவரிடம் எப்போதும் நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும்.
    • எல்லாப் பாவங்களுக்கும் பொய்யே ஆநிவேர். பொய் சொல்லாதே. ஒருவன் பிற பாவங்களை செய்ய மாட்டான்.
    • உழைப்பே உயர்வைத் தரும்.
    • எல்லா உயிர்களிடத்தும் எப்போதும் அன்போடு நடக்க வேண்டும்.
    • வாய்மையே வெல்லும்
      • இரும்புக்கல்லுக்கு வளையாத கருங்கல் பாறை பசுமரத்து வேருக்கு வழி விடும் என்பது போல் அன்பினால் எதையும் சாதிக்க முடியும்.
      • ஊருக்குத்தான் உபதேசம் என எண்ணக்கூடாது.
      • உழைத்து உண்ணும் உணவே உலகில் மிகச்சிறந்த உணவு.
      • உழைப்பே உயர்வைத் தரும். 
      • பிறரது குறையைக் கூராமல் அவரது குறையை மட்டுமே கூற வேண்டும்.
      • முழுமையான இறை நம்பிக்கை நம்மை காக்கும்.

    இயேசுநாதர்:


    • மகான்களின் போதனைகளை ஏற்று மனதில் பதியவைத்து கொள்பவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதையைப்போல் பயன் தருவார்கள்.
    • இறைவன் யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தே கொடுப்பான்.
    •  பக்கத்தில் வாழ்பவன் நெருக்கமானவன் அல்ல. எவனது இதயத்தில் அன்பு உள்ளதோ அவனே நெருங்கியவன் ஆவான்.
    • தவறு செய்து மனம் திருந்தியவர்களை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    • இறைவனை முழு மனதோடு நம்பி அவனை வேண்டுவோர்க்கு அவனது கருணை எப்ப்போதும் கிடைக்கும். 

    புத்தர் :


    • உண்மையை ஆராய்ந்து அறியாமல் வீண் புரளியை நம்பி பயப்படாதே.
    • அடுத்தவர்களை வஞ்சித்து வாழ்ந்தால் அந்த வஞ்சனை ஒரு நாள் நம்மையே அழித்து விடும்.
    • எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது, பேராசை பட்டால்  பெருநட்டமே    ஏற்படும்.
    • பேராசை பெருநட்டத்தையே   தரும்.
    • மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கலாக்காயே மேல்.
    • தன்னைப்போலவே இன்பமுள்ள உயிர்களை எவன் தன சுகம் கருதி துன்புருத்துகிரானோ அவனுக்கு மறுமையில் இன்பம் கிடைப்பதில்லை.
    • பொற்காசுகளை மலை போல் குவித்த்காலும் ஆசைகள் அடங்காது போகும். ஆசைகொண்டு அனுபவித்தால் அற்ப இன்பம் தரும். அதன் பின் விளைவுகள் துன்பம் தரும் என்று அறிந்தவன் முனிவன் ஆவான். 
    • பாவம் பயனளிக்க ஆரம்பிக்காதவரை இன்பம் தருவதாகவே தோன்றும். அது பயனை கொடுக்கும் பொது தான் பாவி தன் பாவத்தை உணர்கிறான்.
    • தூயவராகுங்கள், நல்லவராகுங்கள், நல்லவர்களாக இருங்கள், அனைவரையும் நேசியுங்கள்.
    • இறப்பை வெல்ல முடியாது.
    • அறிவுரைகளை வெறுமனே கேட்ப்பதை விட அதன் உட்பொருளை உணர்ந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும்.    
    •    மக்கள் அனைவரும் சமம். அதில் உயர்வு தாழ்வு ஏதும் இல்லை. மனிதரில் உயர்வு தாழ்வு என ஏதும் இல்லை. 

    Saturday, January 14, 2012

    ஒரு மனிதனுக்குரிய அவன் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கடமைகள் கண்ணபிரான் வாக்கில் உலக மக்களுக்காக:


    • குழந்தைகளின் தேவைகளையெல்லாம் குறைவின்றிக் கொடுத்து வருகிறாயா?
    •  மதிய நேரத்தில் பசித்து வந்து உணவு கேட்பவர்களை நாராயனனாகக் கருதி உணவிடுகிறாயா? (மதிய நேரத்தில் அன்ன தானம் செய்வது மிகச் சிறப்பானது)
    • தினமும் பூஜை புனஸ்காரங்களை அதிகாளையிலேயே செய்து வருகிறாயா?, அதற்க்கு உனது உடல் நிலை இடம் தருகிறதா? (உடல் நிலை சரியில்லாதவர்கள் நீராடல் முதலியவற்றை செய்ய முடியாவிட்டாலும் மனதில் இறைவனை நினைக்க வேண்டும் என்பது புலப்படுகிறது)
    •   தினமும் மனதில் இறைவனை இருத்தி தியானம் செய்கிறாயா?

    குழந்தைச்செல்வங்களைப் பற்றி கண்ணபிரான் உலகிற்கு உணர்த்துவது:


    • உனக்கு எத்தனை குழந்தைகள்
    • அவர்கள் அனைவரும் கற்றவர்கள் மத்தியில் தனித்துவம் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டாயா?
    • அவர்கள் ஊரே போற்றுமளவு தங்கள் திறனை வளர்த்துக்கொண்டுள்ளனரா?
    • குணவான்களா? 

    Friday, January 13, 2012

    ஒரு பெண்ணுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது கண்ணபிரான் வாக்கில்


  • மனைவி குணவதியா?...





  • எது நிஜமோ அதன் மீது மட்டும் (பக்தி) நம்பிக்கை கொண்டவளா?...





  • நல்லதை மட்டுமே செய்பவளா?...





  • உன்னை நேசிப்பவ ளா  ?...





  • உன் வருமானத்திற்கு ஏற்ப  செலவளிப்பவ ளா ?...





  • சொன்னதை செய்து காட்டுபவளா?...





  • எவ்வளவு வறுமைக்கு ஆளானாலும் அதை மற்றவர்களுக்கு சொல்லாதவ ளா ?...





  • புகுந்த வீட்டாரைப் பற்றி குறை கூறாமல் அவர்களை அனுசரித்து செல்பவளா?...






    • நல்ல நண்பன் என்றால் யார் என்பதன் இலக்கணம்?

      வாழ்வில் யார் ஒருவனுக்கு நட்பு சரியாக அமைந்திருக்கிறதோ அவன் வாழ்வில் உயர் நிலையை அடைகிறான்.
      • ஒருவனிடம் செல்வம் மிகுந்திருந்தாலும் கல்வியறிவு மிகுந்திருந்தாலும் குசேலன் போன்ற தவசீலர்களின் நட்பு இல்லாவிட்டால், அதனால் பயனில்லை. தவசீலர்களின் நட்பைக்கொண்டவர்களுக்கு பூமியும் பொன்னும் நல்லறிவும் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.
      • பொறுமையுடையவன் ஒருவனுக்கு நண்பனாகக் கிடைப்பது அவனது ப்ராப்தம். 
      • அனைத்தையும் அறிந்தவர்களின் நட்பு மனிதனுக்கு பிறப்பற்ற நிலையாகிய முக்தியைத் தரும். தேவர்களால் தரப்படும் வரத்தை விட உயர்ந்த பலனைத் தரும்.