Sunday, January 15, 2012

புத்தர் :


  • உண்மையை ஆராய்ந்து அறியாமல் வீண் புரளியை நம்பி பயப்படாதே.
  • அடுத்தவர்களை வஞ்சித்து வாழ்ந்தால் அந்த வஞ்சனை ஒரு நாள் நம்மையே அழித்து விடும்.
  • எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது, பேராசை பட்டால்  பெருநட்டமே    ஏற்படும்.
  • பேராசை பெருநட்டத்தையே   தரும்.
  • மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கலாக்காயே மேல்.
  • தன்னைப்போலவே இன்பமுள்ள உயிர்களை எவன் தன சுகம் கருதி துன்புருத்துகிரானோ அவனுக்கு மறுமையில் இன்பம் கிடைப்பதில்லை.
  • பொற்காசுகளை மலை போல் குவித்த்காலும் ஆசைகள் அடங்காது போகும். ஆசைகொண்டு அனுபவித்தால் அற்ப இன்பம் தரும். அதன் பின் விளைவுகள் துன்பம் தரும் என்று அறிந்தவன் முனிவன் ஆவான். 
  • பாவம் பயனளிக்க ஆரம்பிக்காதவரை இன்பம் தருவதாகவே தோன்றும். அது பயனை கொடுக்கும் பொது தான் பாவி தன் பாவத்தை உணர்கிறான்.
  • தூயவராகுங்கள், நல்லவராகுங்கள், நல்லவர்களாக இருங்கள், அனைவரையும் நேசியுங்கள்.
  • இறப்பை வெல்ல முடியாது.
  • அறிவுரைகளை வெறுமனே கேட்ப்பதை விட அதன் உட்பொருளை உணர்ந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும்.    
  •    மக்கள் அனைவரும் சமம். அதில் உயர்வு தாழ்வு ஏதும் இல்லை. மனிதரில் உயர்வு தாழ்வு என ஏதும் இல்லை. 

No comments:

Post a Comment